இயற்கையான மரச்செக்கு எண்ணெய்
மருத்துவர் + பொறியாளர் =ஆசிரியர்
கன்னிவாடி: நம்மில் பலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டி வாழ்ந்து வருகிறோம். படித்து முடித்ததும் ஏதோ ஒரு வேலை, மாதச்சம்பளம். திருமணம் குடும்பம் என்பதோடு நிறைவு பெற்று விடுகின்றனர்.
வேலைவாய்ப்பு, தொழில் வருமானம்... என புதிய தொடர் இலக்கை நிர்ணயித்து அதை சாதிக்க முயல்வோர் குறைவே. ஆனால் கன்னிவாடி அருகே குட்டத்துப்பட்டியைச்சேர்ந்த தாமஸ், 36. ஆசிரியர் கல்வி முடித்தாலும் பள்ளியை விரும்பாமல், சுயதொழிலில் ஆர்வம் காட்டி, புதிய புதிய தொழில்களுடன் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்
ஒரு ஜே.சி.பி., இயந்திரத்துடன் தொழிலை துவக்கியவர் அதற்கான "செகண்ட் சேல்ஸ் உதிரி பாக விற்பனையாளரானார். பின், கிராமத்தில் அதற்கான பட்டறை அமைத்து தொழிலை மாற்றினார். இப்போது பக்கத்து மாநிலத்தவரும் அவரை தேடி வருகின்றனர். அதோடு நில்லாமல், பழைய முறையிலான செக்கு எண்ணெய் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளார்..
அவர் கூறுவதை கேளுங்கள் கால மாற்றத்தில், அனைத்து தொழில்களும் 'கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. தற்கால உணவுகளில் மேலை நாட்டு
தாக்கம் அதிகளவில் உள்ளது சமையலின் அடிப்படை தேவை யான எண்ணெய் பற்றி பலருக்கு விழிப்புணர்வு இல்லை.
'எக்ஸ் புளோரர்' ரக இயந்திர தயாரிப்பில் 100 டிகிரி வெப்பநிலைக்கும் கூடுதலான சூழலில் பொருளை 40 டிகிரிக்கும் குறைவான உடைத்து எண்ணெய் பெறுவர் சில ரகங்களில் 35 சதவீதம் வரை லிக்விட் பாரபின்' சேர்க்கின்றனர் டிகிரிக்கும் கூடுதலாக, ஒரு முறைக்குமேல் சூடேற்றுவதால் எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு, தீமை தரும் கொழுப் பாக மாறுகிறது.
இது உடல் பருமன் மாரடைப்பு புற்றுநோக்கு வழிவகுக்கும்.
இதை தவிர்க்க, பாரம்பரிய செக்கு முறையில்
40டிகிரிக்கும் குறைவான வெப்பத்தில் எண்ணெய் தயாரிக்கிறேன். இதற்காக உரல் மரக்கலப்பை தயார் செய்து ஜே.சி.பி., உதிரி பாகங்கள் கொண்டு இயந்திரம் உருவாக்கினேன். தரமான எண்ணெய் கிடைப்பதால், மக்கள் பலரும் விரும்பி வருகின்றனர் என்றார். இவரை வாழ்த்த 98421 06634ல் அழைக்கலாம்.
Comments
Post a Comment