இயந்திரம் 1 செயல் 3

குட்டத்துப்பட்டி  

அறிவியலும், அதனால் சமூகமும் எத்தனையோ வளர்ச்சி பெற்றும், நம்மில் பலர் இன்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவராகத்தான் உள்ளனர். தொழில், வேலை வாய்ப்பு, வருவாய் போன்றவற்றில், அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி முன்னேறும் ஆர்வம் சிலரிடமே உள்ளது. புதிய சிந்தனைகளுடன் இலக்கை அடைவதில் விடா முயற்சி, ஆர்வத்தோடு உழைக்கும் போதுதான் வெற்றி கிடைக்கிறது. 

அவர்களில் ஒருவர்தான். கன்னிவாடி அருகே குட்டத்துப்பட்டி தாமஸ்,36. ஆசிரியர் கல்வி படித்த அவர் அப்பணிக்காக காத்திருக்கவில்லை. மாறாக, சுயதொழிலில் ஈடுபட விரும்பினார். ஒரு மண் அள்ளும் இயந்தி ரத்துடன் முயற்சியை துவக்கினார் 

பயன்படுத்திய உதிரி பாகங்களின் விற்பனை செக்கு எண்ணெய் விற்பனை, அதற்கான மரச்செக்கு தயாரிப்பு என எண்ணிய அவரை தேடிவரத் துவங்கினர், தொழில் விருத்தியானது. அதோடு நிற்கவில்லை அவர். மண் அள்ளும் இயந்திரத்தின் சக்தியை ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளுக்கு பயன்படுத்தினால் என்னவென்று எண்ணினார். அதன்விளைவு மண் அள்ளும் இயந்திரத்திலேயே, சுமைதுாக்கும் கிரேன், தரையில் குழிபறிக்கும் ஒரு இயந்திரத்தை வடிவமைத்து உள்ளார் 

இவரது சிந்தனைச்சிறகு விரிவடைந்த ரகசியம் குறித்து அவர் கூறியதாவது: செய்யும் தொழிலில் புதுப்புது அணுகுமுறை, நுட்பம், எல்லையை விரிவுபடுத்த விரும்பினேன். வழக்கமான மண் அள்ளம் இயந்திரத்தின் செயல்பாடுகளும், கிரேன் இயந்திரத் தின் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இயங்குகின்றன. எனவே, ஒரே இயந்திரத்தில் இணைத்தால் செலவு குறைந்து, பயன்பாடு அதிகரிக்கும் என  நம்பினேன். அதனை செயல்படுத்தினேன், குழிபறிக்கும் இயந்திரத்தையும் கூடுதலாக சேர்த்தேன் தற்போது மூன்று இயந்திரங்களின் பணியை ஒரே இயந்திரம் மூலம் மேற்கொள்ள முடிகிறது.

 நிலத்தை சமன்படுத்தல் கிரேன் உதவியுடன் உயர், இடங்களுக்கு பொருட்களை எடுத்துச்செல்வது, மின்கம்பம், மரம் நடுவதற்கு ஏது வாக 6 ஆடி ஆழம், 2 அடி அகலத்தில் குழிகள் அமைப் பது என செயல்படுத்தலாம் என்றார்.

 இவரை பாராட்ட 9842I- 06636 

Comments

Popular posts from this blog

TOMGO AGRO MACHINES PVT.LTD

இயற்கையான மரச்செக்கு எண்ணெய்

TOMGO MINI LOADER