Kumudham manvasanai
இன்றைய விவசாயிகளின் தலையாய பிரச்னை வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இருக்கும் விவசாய தொழிலாளர்களின் வேலைத்திறனும் குறைந்து கொண்டே போகிறது. அரசும் கிராமப்புற எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டம் எனும் நூறு நாள் வேலை எனும் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கும் மக்களையும் சோம்பேறியாக்கி
வீணடிக்கிறது.இதில் விவசாயிகளின் நிலைமைதான் பரிதாபத்திற்குரியது. திரிசங்கு சொர்க்கத்தில் கிடந்து அல்லாடும் வாழ்க்கை இயந்திரத்தின் துணை கொண்டுதான் இன்றைக்கு விவசாயிகள் கொஞ்சமாவது பண்ணையம் செய்ய முடிகிறது பல்வேறு வகை சிறிய இயந்திரங்கள், டிராக்டர் போன்ற இயந்திரங்களை விவசாயிகள் சொந்தமாகவே வைத்துள்ளனர். மிக சிறு விவசாயிகள் அவர்களிடம் வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர்
ஆனால் JCB போன்ற பெரிய ரக இயந்திரானை விவசாய வேலையான குழி எடுத்தல், மண் கரை போடுதல், மண் அள்ளுதல், நிலம் சமன்படுத்துதல், கழிவு நீர் குடடை அமைத்தல். மீன் குளம் அமைத்தல், தேவையற்ற மரங்களை வேருடன் தோண்டி அப்புறப்படுத்துதல் முள் மரங்களை தோண்டுதல், தேலையற்ற பாறை கற்களை தோண்டி எடுத்தல் போன்ற பல்வேறு விதமான பணிகளை செய்வதற்காக
விவசாயிகள் அதற்கான தொழில்முறை வாடகைக்கு விடுபவர்டா்களிடம் வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர். ஏனென்றால் ஒரு சாமான்ய, நடுத்தர விவசாயியினால் சொந்தமாக JCB இயந்திரத்தை விலைக்கு வாங்கி வைத்துக்கொள்ள இயலாது. அத்துடன் டிராக்டா போன்ற விவசாய இயந்திரங்களைப்போல JCB இயந்திரத்திற்கான பயன்பாடும் குறைவு.
30 லட்சத்துக்கு மேல் விலையுள்ள JCB இயந்திரம் தேவையற்ற ஒரு முதல் முடக்கம் அத்துடன் JCBஇயந்திரம் இயக்குவதற்கு அதற்கென தனித்துவமான பயிற்சி பெற்ற ஆப்பரேட்டாகள் தேவை இவர்களுக்கான ஊதியமும் அதிகம்
எனவேதான் பெரும்பான்மையான விவசாயிகள் வாடகைக்கு JCB இயந்திரங்களை நாடுகின்றனர். JCB இயந்திரத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதன் வாடகையும் உயர்ந்து கொண்டே போகின்றது. இப்போது குறைந்தபட்ச வாடகை என குறைந்தது 3மணி நேரத்திற்கான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் JCB ஆபரேட்டருக்கும் பேட்டா மற்றும் சில தேவைகளை சரிக்கட்ட அதிகப்படியாக செலவு விவசாயியிக்கு உண்டாகிறது
சிறிய விவசாயிகளுக்கு என சிறிய டிராக்டர்கள், சிறிய பவர் டிரில்லர்கள், சிறிய களை எடுப்பு இயத்திரங்கள் வந்து விட்டன். ஆனால் JCB இயந்திரமோ நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக பெரிதாகிக்கொண்டே போகின்றது இது சிறியதாய் இருந்தால், குறைந்த விலையில் கிடைத்தால் ஒவ்வொரு பண்ணையாளர்களுக்கும் பயன்படுமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இயல்பாக வரும்
திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடி 10 வது கி.மீட்டரில் குட்டத்துப்பட்டியில் சாலையோரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி தம்மை வியப்பின் உசத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. ஆரஞ்சு வண்ணத்தில் ஸ்மார்ட் ஆக ஒரு குட்டி JCB போல 'மினி JCB' நின்று கொண்டிருந்தது. இறங்கி நின்று அதனை நாம் ரசித்துக் கொண்டிருந்தபோது சிரித்த முகத்துடன் வனக்கம் கூறி நமமை வரவேற்றவர் தாமஸ் அருமையானதொரு அடிமட்ட கண்டுபிடிப்பாளர் என்பதை அவரது ஒா்க் ஷாப்பின் உயரத்தில் பொருத்தப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த காற்றாலை கூறியது
மண்வாசனை ககாக அவருடன் மனந்திறந்து உரையாடிய போது அடிப்படையில் நான் சின்னதொரு கிராமத்து ஒர்க் ஷாப் உரிமையாளன் கிராமத்தில் சிறிது சிறிதாக கிடைக்கும் வேலையை செய்து வருவேன் ஓய்வு நேரம் நிறைய கிடைப்பதால் கிடைக்கும் இயந்திரங்களை பிரித்து எவ்வாறு பல இயங்குகின்றது எனப் பார்த்து படித்து தெரிந்து கொண்டு மீண்டும் பொருத்தி இயங்கச் செய்வேன், JCB இயந்திரத்திற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யத் துவங்கினேன், பழைய JCB இயந்திரங்களை வாங்கி அதனை உதிரி பாகங்களாக விற்பனை செய்ய துவங்கினேன்.
இப்படியாக JCBக்கும் எனக்குமான பந்தம்
கூடிக்கொண்டே போனது. ஆனாலும் என் அடி மனதில் சாமான்யனுக்கான குறைந்த விலையிலான மினி JCB மினி இயந்திரத்தை வடிவமைத்தால் என்ன எனும் எண்ண ஓட்டம் வலுத்துக்கொண்டே போனது.
ஒரு சிறிய JCB இயந்திரம் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதனை முதலில் சிந்தித்தபோது இதற்கென போக்குவரத்து துறையில் பதிவு செய்வது, சாலை வரி கட்டுவது, ஆண்டுக்கு ஒரு முறை ஃபிட்னஸ் செக்கிங் செல்வது போன்ற விவசாயிகட்டு இயலாத, நடைமுறைக்கு சாத்தியமில்லா அரசு தொடர்பு இருக்கக் கூடாது. சிறியதாக ஒரு இடம் விட்டு குட்டியானை போன்ற சிறிய வாகனத்தில் எளிதில் தூக்க வைத்துக்கொண்டு செல்ல ஏதுவாக இருக்க வேண்டும். இப்போது எளிதில் கிடைக்கின்ற மினி வீடர் போல இயக்கு வதற்கு பராமரிப்பதற்கு இலகுவான. மிகக் குறைந்த, எளிய தொழில்நுட்பம் உள்ள கருவியாக இருக்க வேண்டும் இந்த மினி JCB இயக்க மிகக் கடினமான பயிற்சி சான்றிதழ் தேவைப்படக் கூடாது
6.5 குதிரை திறன் உள்ள பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த மினி JCB ஒரு மணி நேரம் இயங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே செலவாகும். இந்த இயந்திரத்தின் மொத்த எடை 500 கிலோ மட்டுமே."
மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக் கூடிய பெட்ரோல் அல்லது மசல் இன்ஜின் வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அத்துடன் எளிதில் கிடைக்கக்கூடிய பெரிய JCB இயந்திரங்களில் உதிரி பாகங்களே போதுமானதாக இருக்க வேண்டும். எந்த ஒரு பொருளும் அபூர்வமாக கிடைக்கக் கூடியதாக இருக்கவே கூடாது. ஒரு சாமான்ய விவசாயி எளிதில் சிறிய பழுதுகளை செய்து கொள்ள கூடியதாகவும், எளிதில் இயக்க பராமரிக்க கலபமானதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் ஒரு சிறிய, நடுத்தர விவசாயி கூட எளிதில் வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டும்.
இப்படி வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என பட்டியல் கூடிக் கொண்டே போன து கண்விழித்து இரவெல்லாம் தயாரித்த வரைபடங்களும் திட்டங்களும், அதனை வடிவமைக்கும்போது ஏற்பட்ட சிக்கல்களும், சவால்களும் என்னை புடம்போட்டு மெருகேற்றியது
கொரோனா காலகட்டத்தில் தொழில் முடங்கியது. தேவைக்கு மேலேயே நேரம் கிடைத்தது. இடைத்த நேரத்தை கவனமாக பயன்படுத்தி பற்பல சோதனைகள்
வேதனைகள் - வேடிக்கைப் பார்ப்போரின் எள்ளல் பேச்சுகள் என காலம் கடந்தது.
"மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செல்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார் எனும் நீதிநெறி விளக்கப்பாடல் கண்துஞ்சா மனக் கண்முன்னே வந்தோடி சென்றது".
செய்து சீர்திருத்தி மீண்டும் சோதித்து பல கட்டமான செயல் திறன் சோதனைகள், கன செயல்பாடுகள் என்பதை பல்வேறு கட்டத்தைக் கடந்து இறுதியாக ஒரு நிறைவான வடிவம் கிடைத்தது.
6.5 குதிரை திறன் உள்ள பெட்ரோல் இன் ஜின் கொண்ட இந்த மினி ICB ஒரு மணி நேரம் இயங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே செலவாகும். இந்த இயந்திரத்தின் மொத்த எடை 500 இலோ மட்டுமே. மிக குறுகலான இடைவெளியில் கூட செல்லச் கூடியதாக உள்ள இதன் அகலம் 4- 1/2 அடி மட்டுமே. நீளம் 10 அடி. இதன் ஆரேட்டிங் கையின் உயரம் 12அடி ஆகும். 160 டிகிரி அளவில் திரும்பி வேலை செய்யுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது
இதன் செலவு ஒரு புதிய மோட்டார் சைக்கிளின் விலை அளவுதான் வரும்
தாமஸின் இந்த வடிவமைப்பு விவசாய வேலைகளுக்கு நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறைக்கு சிறந்ததொரு தீர்வு என்ற கருத்துக்கு எந்த எதிர்கருத்தும் இருக்காது என்பது சர்வ நிச்சயம்
தொடர்பிற்கு: 9841 06638.
ENGLISH:
The main problem of today's farmers is not getting a job. The employ ability of existing agricultural workers is also declining. The government and the lazy people who have come up with the 100 day work program called Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme to ensure the livelihood of the rural people
Wasting. The condition of the farmers is deplorable. Today, farmers are able to farm a little with the help of the living machine lying in the trinity paradise. Farmers own a variety of small machines, such as tractors. Very small farmers rent to them
But large-scale machinery such as the JCB can be used for a variety of tasks, such as digging ditches, digging soil, leveling the ground, leveling the ground, setting up a septic tank, setting up a fish pond, digging up trees before uprooting and disposing of unwanted trees, and digging up unwanted boulders.
Farmers hire professionals to hire them. This is because it is not possible for an ordinary, middle class farmer to afford to own an JCB machine and the use of JCB machine is less like agricultural machinery like tractor.
An JCS machine costing more than 30 years requires an unwanted first shutdown as well as specially trained operators to operate the JCB machine. The pay for them is also high
That is why the majority of farmers are looking for rental JCB machines. As the demand for JCB machines increases, so does its rent. Now they get paid for at least 3 hours as minimum rent. As well as JCB
It is too costly for the operator to adjust the beta and some requirements for the farmer.
Small tractors, small power tillers, small weeding machines have arrived as for small farmers. But the JCB machine is getting bigger and bigger every day.
On the way from Dindigul to Kanniwadi Road, at the 10th meter, on the roadside at Kuttathupatti, a pleasant surprise took you to the peak of your amazement. The mini JCB stood out like a miniature JCB in the Smart Ka in orange. The windmill, which was mounted at the height of his workshop, said that Thomas was a wonderful grassroots inventor who greeted us with a smiling face as we stood and watched.
When I opened up and talked to him about the smell, I'm basically a small village workshop owner. I started selling spare parts
Thus the bond between JCB and me
Gathered but my feet kept growing in my mind what to do if I designed a low cost mini JCB machine for the common man.
When you first think about what a small JCB machine should look like, registering with the Department of Transportation for this purpose should not be an impossible monster involvement in a farmer-impossible practice such as going on a fitness check once a year to build a road tax. It should be easy to carry in a small vehicle like a puppy leaving a small space. Must be a very low-maintenance, industry-friendly tool that can be operated and maintained like the Mini Weeder that is now readily available. This mini JCB does not require a very rigorous training certificate to operate Everything
"This mini JCB with a 6.5 horsepower petrol engine costs only one liter of petrol per hour of operation. The total weight of this engine is only 500 kg.
You can buy and fit a petrol or diesel engine that is readily available in the market. As well as spare parts should be sufficient for large JCB machines that are readily available. No item should be infrequent or available. An ordinary farmer should be able to easily make minor repairs and be easy to operate and easy to maintain. And even a small, medium farmer should be able to afford it
The list goes on and on. I was fascinated by the drawings and plans that I made all night long, and the problems and challenges that came with designing it.
The industry was paralyzed during the Corona period. Got time above need. Many tests using the available time carefully ...
The pains have passed as the elliptical tendencies of the fun-seekers have passed away.
Done. Reformer Re-tested Multi-Structured Performance Tests Domain Functions that went through various stages and finally got an efficient format
Equipped with a 6.5 horsepower petrol engine, this mini JCB costs only one liter of petrol in an hour. The total weight of this machine is only 500 kg. It is only 4 1/2 feet wide by 10 feet a day and the height of its arched arm is 12 feet. It is designed to work back to 160 degrees.
The cost is about the price of a new motorcycle
There is no doubt that THOMAS design is the best solution to the prevailing agricultural-labor shortage.
Contact: 9841 06636.
Comments
Post a Comment